Tuesday, September 13, 2016

Prevention of Money Laundering Act 2002 in Tamil

பணச் சலவை தடுப்பு சட்டம் 2002
(Prevention of Money Laundering Act 2002 in Tamil)

போதைபொருள் விற்பவர்கள், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பவர்கள், (நியாயமற்ற வழிகளின் மூலம் சம்பாதிக்கப்படும் பணம் -Illegal Sources)  தாங்கள் ஈட்டும் கறைபடிந்த பணத்தை , நியாயமான வழிகளில் இருந்து ஈட்டப்படும் பணத்துடன் கலந்துவிடுவதால், கறைபடிந்த பணமும் நல்ல முறையில் சம்பாதிக்கப்பட்ட பணம் போலத் தோற்றமளிக்கிறது.இதுவே பணச் சலவை (Money Laundering ) எனப்படுகிறது.இதுவும் கருப்புப் பணம் என்பதும் வெவ்வேறானவை.நியாயனான முறையில் சம்பாதிக்கப்பட்டாலும் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்படும் பணமே கருப்புப் பணம் (Black Money) எனப்படுகிறது.

சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் :
கீழ்காணும் செயல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை ஆகும். இவற்றில் ஈடுபட்டு ஒருவர் பணம் சம்பாதித்தால் அது 'சட்டத்திற்குப் புறம்பான வழியில் பெறப்பட்ட பணம் " (Money earned from Illegal Resources) ஆகும்.
1.சட்டத்திற்குப் புறம்பான நில வணிகப் பரிமாற்றங்கள் -
2.போதை மருந்து விற்றல்/கடத்துதல்
3.ஆள் கடத்துதல்
4.ஆயுதங்கள், புராதணப் பொருட்கள் மற்றும் தங்கம் கடத்துதல்
5.சட்டத்திற்கு எதிராக குதிரைப் பந்தயம், லாட்டரி போன்றவை நடத்துதல்
6.விபச்சாரம்
7.பணம் சம்பந்தப்பட்ட ஏமாற்று வேலைகள் (Financial Frauds)
8.ஊழல்
9.வனவிலங்குப் பொருட்கள் (கடத்துதல்,விற்றல்)  மற்றும் தடை செய்யப்பட்ட, சட்டவிரோத செயல்கள்
பணச்சலவை எவ்வாறு செய்யப்படுகிறது?
பணச் சலவை மூன்று நிலைகளில் செய்யப்படுகிறது.
பணச்சலவையில் மூன்று நிலைகள் :
முதல் நிலை:
சட்டவிரோதமன காரியங்களைச் செய்வதன் மூலம் ஈட்டப்பட்ட பணம் , சிறு சிறு தொககளாகப் பிரிக்கப்படுகிறது.இதற்கு Smurfing என்று பெயர்.இந்த தொகைகள் , சிற்ய அளவிலான வரைவுக் காசோலைகள், காசோலைகள் என Instruments ஆக மாற்றப்பட்டு மெல்ல மெல்ல சட்டபூர்வமான பணஓட்டத்தில் (inserted into the financial system) கலக்கப்படும்.இது பிறரால் எளிதில் கவனிக்கப்படக்கூடும் என்பதால் , மிகவும் மெதுவாகவும் கவனத்துடனும் செய்யப்படுகிறது.
இரண்டாம் நிலை: இரண்டாவது கட்டம் Layering  என்றழைக்கப்படுகிறது.சிறுசிறு தொகைகளாகப் பிரிக்கப்பட்டு பொது ஓட்டத்தில் கலக்கப்பட்டபின் , மீண்டும் மீண்டும் சுழற்சி செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் பல பெயர்களுக்கும் -  நாட்டின் எல்லையைத் தாண்டியும் கூட அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிப்பது கடினமாக ஆகிவிடும்.

மூன்றாம் நிலை : ஒருங்கிணைத்தல் (Integration) : கறைபடிந்த பணத்தை பொதுபண ஓட்டத்தில் ஒருங்கிணைத்தல். - நில வணிகங்களில் முதலீடு செய்தல், புதிய வர்த்தக நிறுவனங்களைத் தொடங்குதல் போன்றவற்றில் இந்தப்பணம் முதலீடு செய்யப்படுகிறது.வங்கியாளர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் கூட இந்த துரோகச் செயலுக்கு உடந்தையாக இருந்துவிடுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கும் உண்மை ஆகும்.


No comments:

Post a Comment