நண்பனின் டயரி
அழகிய டயரி ஒன்றை நண்பர் ஒருவர் பரிசாகக் கொடுத்தார்.நீண்ட நாட்களாக விட்டுப் போயிருந்த நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை மீண்டும் தொடரலாம் என்று எண்ணி டயரியை எடுத்தேன்.அதில் முதல் பக்கத்தில் ஒரு குறிப்பு:
"200 ஆண்டுகள் ஆனாலும் வீணாகாத காகிதத்தால் இந்த டயரி உருவாக்கப்பட்டுள்ளது"
திகீர் என்றது எனக்கு.
200 ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய காகிதத்தில் வேதத்தையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அமர காவியங்களையும் எழுதலாம்.அதில் எழுதும் அளவுக்கு முக்கியமான விஷயங்கள் நம்மிடம் எது வுமே இல்லை என்று மனம் சொல்லியது.
டயரி எழுதுவதை இரண்டாவது முறையாக விட்டுவிட்டேன்.