Saturday, March 28, 2015

இரந்து வாழும் தமிழர்கள்!

இரந்து வாழும் தமிழர்கள்!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களுக்கு மன்னர்கள் வரியிலா நிலம் முதல் பலவகையான கொடைகளை வழங்கி உள்ளனர்.அவற்றையெல்லாம் அந்தந்த ஊரில் உள்ளவர்கள் ஆட்டையைப் போட்டுவிட்டார்கள்.கோவில்களின் இடங்களில் கடை வைத்திருப்பவர்கள் பலர் அவற்றுக்கான வாடகையைக் கூட கொடுப்பதில்லை! ஆனால் கோவில் உள்ள ஊர்களுக்கு காரில் செல்பவர்கள் பாடு கொஞ்சம் வேதனைக்கு உரியதே!

அண்மையில் திருவலஞ்சுழி போயிருந்தேன்.இறைவனை தரிசனம் செய்துவிட்டு வரும்போது காருக்கு அருகில் ஒரு சிறுவன் ! இருபது ரூபாய் எடுங்கள் என்றான்.எதற்கு என்றேன்.ஊராட்சி வசூல்.கொடுக்காமல் இங்கிருந்து போக முடியாது என்றன்.சரி என்று கொடுத்துவிட்டு அடுத்த ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சாமிமலைக்கு சென்றோம்.அங்கேயும் இதே கதை! இருபது ரூபாய் எடுங்கள் என மிரட்டினான் ஒரு சிறுவன்! முடியாது என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.எதிர்பார்த்தது போலவே இன்னொரு வாசலில் ஒரு சிறுவன் வண்டியை மறித்தான்.என்ன சொன்னாலும் பணம் தர முடியாது என்று மறுத்துவிட்டோம்.இன்னும் மூன்று கிலோ மீட்டரில் பட்டீச்வரம் இருக்கிறது.அங்கேயும் வசூல் வேட்டை நடக்கிறது.

இப்படி ஒவ்வொரு ஊராட்சியும் பேரூராட்சியும் காரில் வருபவர்களிடம் பணம் கேட்டால் கோவிலுக்குப் போகும் எண்ணமே மாறிவிடுகிறது! இவர்கள் நமக்காக என்ன செய்கிறார்கள்? இவர்களுக்கு நாம் ஏன் பணம் தரவேன்டும்? எங்காவது இதுபற்றி அறிவிப்பு இருக்கிறதா? தகவல் பலகையில் எழுதி வைத்திருக்கிறார்களா? எவனோ ஒருவன் குத்தகை எடுத்து கொள்ளையடிப்பதை உள்ளாட்சி அமைப்புகள் எப்படி அனுமதிக்கின்றன?

தமிழகம் முழுவதும் இதே கதைதான்.இராமேச்வரம் போனால் , பாம்பன் பாலத்தைக் கடந்து செல்ல முப்பது ரூபாய் கொடுக்க வேண்டு.பாலத்தை தாண்டி ஊருக்குள் நுழைய நூறு ரூபாய் தரவேண்டும்.உள்ளே போனால் கார் நிறுத்தும் இடம் கூடக் கிடையாது.அதற்கும் தனியாகப் பணம் தரவேண்டும்!
இவற்றையெல்லம் தூக்கி சாப்பிடுவது -சாலையில் உள்ள உபயோகிப்பாளர் கட்டண வசூல்! ஒரு கிலோ மீட்டருக்கு கிட்டத்தட்ட ஒரு ரூபாய் என்ற அளவில் வேக வேகமாகக் கொள்ளையடித்து வருகிறார்கள் !

தமிழகக்  கோயில்களில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள்! தயவு செய்து எங்கள் ஊருக்கும் கொஞ்ச நாள் வந்து குடியிருங்கள்.நாங்களும் கொஞ்சம் சில்லறைய சேர்த்துக் கொள்கிறோம்! 

No comments:

Post a Comment