Sunday, September 11, 2011

Doctrine of Constructive Notice-Tamil

" Doctrine of constructive Notice " என்பதற்கும் "Doctrine of Indoor Management" என்பதற்கும் உள்ள ஒற்றுமை , வேற்றுமைகள் என்ன?
இந்திய நிறுமங்கள் சட்டம் 1956 இது பற்றி குறிப்பிடுகிறது.
ஒரு நிறுமம் எவ்வாறு இயங்குகிறது , அதன் சட்ட திட்டங்கள் என்ன என்பதை எல்லாம் அதன் "Articles of Association" விவரிக்கிறது.உதாரணமாக ஒரு நிறுமத்தின் இயக்குனர் குழு எவ்வளவு கடன் வாங்கலாம் என்பது அதன் "AOA" வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர்கள் இந்த அளவுக்கு மேல் கடன் வாங்கும்போது அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.உதாரணமாக உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் அனுமதியைப் பெற்ற பிறகு கடன் வாங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் கடன் வாங்கும்போது இத்தகைய அனுமதியை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று நினைப்பார்கள்.அதனால் இயக்குனர்கள் கேட்கும் கடன் தொகையை கொடுக்கிறார்கள்.ஒருவேளை , இயக்குனர்கள் இவ்வாறு அனுமதி வாங்காமல் கடன் வாங்கி இருந்தால் அதை காரனம் காட்டி "இயக்குனர்கள் வாங்கிய பணத்திற்கு நிறுமம் பொறுப்பல்ல" என்று சொல்லும்போது
"Doctrine of Indoor Management" பணம் கொடுத்தவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. "Articles of Association" இல் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை நிறுமம் அப்படியே செயல்படுத்தும் என்று வெளியில் இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள்.பணம் கொடுத்தவரும் அப்படியே நினைக்கிறார்.அதாவது இயக்குனர்கள் தம்மிடம் கடன் வாங்குவதற்கு முன்னர் உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி முறையான அனுமதியைப் பெற்றிருப்பார்கள் என்றுதான் நினைத்து பணம் கொடுத்து இருப்பார்?இப்போது இல்லை என்று சொன்னால் அது முறையாகுமா? எனவே "Doctrine of Indoor Management" பணம் கொடுத்தவருக்கு ஆதரவாக செயல்படுகிறது.

Monday, April 4, 2011

ஏசியில் பயணம் .. ஓசியில் தலைவலி..

திருச்சியில் இருந்து குளிர்சாதனப் பேருந்தில்போக வேண்டும் என்று ஆசை உந்தியது.இரு நூற்று எழுபது ரூபாய் தானே என்று ஏறி அமர்ந்தேன். விழுப்புரம் வரையில் ஆனந்தமாக உறங்கிய வண்ணம் பயணம்.விழுப்புரம் அருகே "பாத்ரூம் போறவங்க. டிபன் சாப்பிடறவங்க எல்லாம் இறங்கலாம்" என்று குரல் கேட்டு இறங்கினேன். மூன்று ரூபாய் கொடுத்து சிறுநீர் கழித்தேன்.திரும்புகையில் ஒருத்தர் கேட்டார்."சார், இந்த பாத் ரூம் என்ன ஏசியா பண்ணியிருக்கான்? "
"இல்லையே ! எதுக்கு கேட்கறீங்க?"
" இல்லை மத்த இடத்தில் எல்லாம் ரெண்டு ரூபாய்தான் வாங்குரானுவோ இவன் மட்டும் மூணு ரூவா கேக்குறான் "
அவர் வருத்தம் புரிந்தது.நீரிழிவுக்காரர்களுக்குத்தான் எவ்வளவு செலவு?
(நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சர்க்கரை வியாதிக்காரர்கள் ஒண்ணுக்குப் போக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்குத்தான் என் வோட்டு.)

விழுப்புரம் தாண்டி கொஞ்ச நேரத்தில் ஏசி ஓடவில்லையோ என ஒரு சந்தேகம். எழுந்து போய் கண்டக்டரைக் கேட்டேன். அவரும் எழுந்து வந்து பார்த்துவிட்டு டிரைவரிடம் போய் ஆமாண்ணே ஏசி ஓடலை என்றார். அவ்வளவுதான். கோயம்பேட்டில் இறங்கும் வரை ஏசி ஓடவில்லை. வண்டிக்குள் காற்று வர வழியும் இல்லை. ஒரே நாத்தம். தூக்கமும் போய் தலைவலிதான் மிச்சம்.
சக பயணிகள் யாரும் இதைப்பற்றிக் கவலையே படவில்லை.
இனிமேல் தமிழக அரசின் "குளிர் சாதனப் பேருந்தில் "ஏறுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.