Sunday, July 6, 2014

இந்திய ஒப்பந்த சட்டம் 1872
1872 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் நாள் , இந்திய ஒப்பந்த சட்டம் 1872 அமலுக்கு வந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர மற்ற மானிலங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். அனைத்துவிதமான  ஒப்பந்தங்கள் பற்றியும் இந்த சட்டம் கூறவில்லை. சில வகை ஒப்பந்தங்கள் வேறு சட்டங்களில் விவாதிக்கப்படுகின்றன.உதாரணமாக கூட்டு வியாபரம்(PARTNERSHIP ACT), சரக்கு விற்பனை (SALE OF GOODS ACT) ,மாற்று முறை ஆவணசட்டம்(NEGOTIABLE INSTUMENTS ACT), அசையா சொத்து மாற்றங்கள் (TRANSFER OF PROPERTY ACT) போன்றவை ஒவ்வொரு விதமான ஒப்பந்தங்கள் பற்றி கூறுகின்றன.
இந்திய ஒப்பந்த சட்டம் 1872, ஒப்பந்தங்களின் பொதுவான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் பற்றி விளக்குகிறது.இந்த சட்டத்தை இரண்டு பகுதியாகப் பிரித்துக்கொள்ளலாம். பிரிவு 1 முதல் பிரிவு 75 வரை , ஒப்பந்தங்களின் பொதுவான அடிப்படை விதிகள் பற்றி பேசப்படுகிறது.பிரிவு 124 முதல் பிரிவு 238 வரை சிலவகை சிறப்பு ஒப்பந்தங்கள் (எ-டு: அடகு, முகவாண்மை (agency) ) பற்றி பேசப்படுகிறது.

இந்திய சட்ட வடிவங்களில் , எல்லா சட்டங்களிலும் பிரிவு -2 (SECTION-2) என்பது வரையறைகள் பிரிவாக இருக்கும்.
அதாவது அந்த சட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து சொற்களுக்கும் இந்த பிரிவில் வரையறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஏன் இப்படி செய்யவேண்டும்? முக்கிய சொற்களை முன்பே வரையறுத்து விடுவதால் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு பொருள் சொல்லி யாரும் குழப்ப முடியாது.இதனால் சில சிக்கல்களை தவிர்க்க முடியும்,

உடன்படிக்கை (Agreement) மற்றும் ஒப்பந்தம் (Contract) : 

பிரிவு 2(h) : இந்த பிரிவு ஒப்பந்தம் என்ற சொல்லை வரையறுக்கிறது. ஒப்பந்தம் என்றால் என்ன?
பிரிவு 2(h) இன்படி " ஒப்பந்தம் என்பது, சட்டத்தினால் செயல்படுத்தக்கூடிய ஓர் உடன்படிக்கை ஆகும். ( Contract is an agreement enforceable by law)
அப்படியென்றால் "உடன்படிக்கை - Agreement - என்பது என்ன?

பிரிவு 2(e) "உடன்படிக்கை " என்ற சொல்லை வரையறுக்கிறது.

எனவே அனைத்து உடன்படிக்கைகளும் "ஒப்பந்தம் " அல்ல. ஆனால் அனைத்து ஒப்பந்தங்களும் உடன்படிக்கைதான்.
(All Agreements are not contracts But all Contracts are agreements)

ஒப்பந்தம் என்று சொல்ல முடியாத உடன்படிக்கைகள் யாவை?

சமூக உடன்படிக்கைகளை இவ்வாறு கூறலாம்.உதாரணமாக நீங்கள் உங்கள் நண்பரை சாப்பிடுவதற்கு வீட்டுக்கு அழைக்கிறீர்கள். ஆனால் அன்றைய தினம் வேறு அவசர வேலையாக நீங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியூர் போய்விட்டீர்கள்.உங்கள் நண்பர் வீட்டுக்கு வந்து ஏமாற்றம் அடைகிறார். இதற்காக அவர் உங்கள் மேல் வழக்கு  தொடர முடியுமா? நிச்சயமாக முடியாது.ஏன் என்றால் நீங்கள் செய்துகொண்டது சமூக உடன்பாடே தவிர சட்டப்படி செயல்படுத்த்க்கூடிய ஒப்பந்தம் அல்ல.

கணவருக்கும் மனைவிக்கும் இடையிலான உடன்பாடும் இத்தகையதே.
ஸ்ரீலங்காவில் வேலை பார்த்துவந்த ஒருவர், இங்கிலாந்தில்  வாழும் தம் மனைவிக்கு மாதா மாதம் ஒரு தொகையைக் (வீட்டுச் செலவுக்காக) கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.ஆனால் தம் மனைவி தமக்கு விசுவாசமாக இல்லை என்று அறிந்தபின் அவர் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.அவர் செய்தது சரி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.
சட்டப்படி செல்லத்தக்க ஓர் ஒப்பந்தத்தில் இருக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் :
இந்திய ஒப்பந்தங்கள் சட்டத்தின் பிரிவு 10 பின்வருமாறு கூறுகிறது:
All agreements are contracts if they are made by the free consent (பரிபூரண -முழுமையான சம்மதம்)  of the parties competent to contract , for a lawful Consideration and with a lawful Object and are not hereby expressly declared to be void"

1. Agreement : 
2.Free Consent : ஒப்பந்தம் செய்துகொள்ளும் நபர்கள் , முழுமையான சம்மதத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும்.இந்த சம்மதமும் FREE ஆக இருக்க வேண்டும்.- அதாவது-வேறு யாராலும் வற்புறுத்திப் பெறப்பட்டதாகவோ பிறரால் அச்சுறுத்தப்பட்டு பெறப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.
3.Competency - ஒப்பந்தம் செய்துகொள்ள சில தகுதிகள் அவசியம்.உதாரணமாக 18 வயது நிறையாத மைனருடன் செய்துகொள்ளும் ஒப்பந்தம் செல்லாது.முட்டாள்கள், மனனிலை சரியற்றவர்கள் போன்றவர்களுடன் செய்துகொள்ளும் ஒபந்தங்களும் செல்லாது.
4.Lawful consideration : consideration என்பதை பிரதிபலன் என்று கூறலாம்.ஒப்பந்தத்தின்படி நாம் ஒருவருக்கு ஒரு வேலையை செய்துகொடுக்கிறோம் அல்லது செய்யாமல் இருக்கிறோம் என்றால் அதற்குக் கைம்மாறாக அவர் நமக்கு கொடுப்பதை consideration என்கிறோம்.இந்த கைம்மாறு சட்டப்படி செல்லக்கூடியதாக இருக்கவேண்டும்.உதாரணமாக நான் உங்களுக்கு பத்து மூட்டை அரிசி தருகிறேன் என்றால் நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாய் தரமுன்வந்தால் அது நியாயம்.ஆனால் அதற்காக வேறு ஒரு நபரை அடித்து கைகால்களை வெட்ட வேண்டும் என்றால் அது செல்லாது.
5.Lawful Object : ஒப்பந்தத்தின் நோக்கம் இதுதான்.ஒப்பந்தத்தின் நோக்கமும் சட்டப்படி செல்லத்தக்கதாக இருக்கவேண்டும்.சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் ஒப்பந்தத்தின் நோக்கமாக இருக்கக் கூடாது.
6.Not declared to be void : இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சட்டம் எதுவும் உங்கள் ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்காமல் இருக்கவேண்டும்.

QUASI CONTRACTS :இவற்றை எழுதப்படாத ஒப்பந்தங்கள் என்று சொல்லலாம்.இந்திய நாட்டின் குடிமகன் ஒவ்வொருவனும், இந்திய சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்-பின்பற்றவேண்டும்.உதாரணமாக , சாலையில் நடந்து செல்லும்போது நீங்கள் ஒரு பொருளைக் கண்டெடுத்தால் அதன் உரிமையாளர் யார் என்று கண்டுபிடித்து அவரிடம் அதை ஒப்படைக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு கண்டெடுத்த பொருளை உங்களுடையது என்று உரிமை கொண்டாடக்கூடாது.இதுதான் Quasi contract.இப்படி செய்வேன் என்று நீங்கள் யாருக்கும் எழுதி கையெழுத்திட்டு தரவில்லை.ஆனால் சட்டப்படி நீங்கள் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டும்.இந்திய ஒப்பந்தங்கள் சட்டத்தின் பிரிவு 68 முதல் 72 வரை Quasi contract. பற்றி விளக்கப்படுகிறது.
பிரிவு 68

Monday, June 16, 2014

இந்திய நிறுமங்கள் சட்டம் (INDIAN COMPANIES ACT 2013)

இந்திய நிறுமங்கள் சட்டம் (INDIAN COMPANIES ACT 2013) 

இந்திய நிறுமங்கள் சட்டம் 1956 (Indian Companies Act 1956) முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Indian Companies Act 2013 என்றழைக்கப்படும் இதில் பல புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.பழைய சட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய சட்டத்தின் சிறப்பம்சங்கள் :

29 அத்தியாயங்கள் (CHAPTERS)

470 பிரிவுகள் (SECTIONS) 



* ஒரு நபர் நிறுமம் என்ற புதிய நிறுமவகை  {One Person Company (OPC) }இந்த சட்டத்தின் மூலம் அறிமுகமாகிறது.இது ஒரு தனியார் நிறுமம் ஆகும்.இதில் ஒரே ஒரு உறுப்பினர் / ஒரே ஒரு இயக்குனர் மட்டுமே இருப்பார்.வருடாந்திர உறுப்பினர்கள் கூட்டத்தை (AGM) கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. தற்போது இயங்கிவரும் - ரூபாய் 50 லட்சம் மூலதனமும் ரூபாய் 2 கோடி விற்றுமுதலும் கொண்ட தனியார் நிறுமங்களும் ஒரு நபர் நிறுமம் ஆக மாறிக்கொள்ளலாம்.

*பெண் இயக்குனர் Woman Director

*இயக்குனர்களுக்கு கடன் வழங்குதல்( Loans to Directors)

*இயக்குனர்கள் தகுதி இழத்தல்

*உள்ளுறை இயக்குனர் (Resident Director)

*கணக்கு ஆண்டு (Accounting Year)

*நிதி ஆண்டு( Financial Year)

*தணிக்கையாளர்களை நியமனம் செய்தல் (Appointment of Statutory Auditors)



அத்தியாயம் - II

 பிரிவு 3 (Section 3)

ஒரு நிறுமத்தை உருவாக்குதலும் அது தொடர்பான இதர விஷயங்களும்

3.(1) சட்டபூர்வமான ஒரு நோக்கத்திற்காக
(a) பொது நிறுமமாக இருந்தால் , ஏழு பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இணைந்தும் : அல்லது
(b) தனியார் நிறுமமாக இருக்குமெனில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இணைந்தும்; அல்லது
(c) ஒரு நபர் நிறுமமாக - அதாவது தனியார் நிறுமமாக இருக்குமெனில் ஒரு நபர் மட்டுமோ
ஒரு நிறுமத்தை உருவாக்கலாம். இவர்களின் பெயர் அல்லது ஒரு நபரின் பெயர் Memorandum ல் இருக்க வேண்டும்.
நிறுமத்தைப் பதிவு செய்வதில் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களும் பின்பற்றப்பட வேண்டும்.


Saturday, June 14, 2014


 வருமான வரி சட்டம்    INCOME TAX ACT 1961 


கலால் வரி (EXCISE DUTY )

(  ICMA , ICAI , ICSI  போன்ற Professional Courses பயிலுபவர்களுக்கும் B.Com., M.Com போன்ற பட்டப்   படிப்பு படிப்பவர்களுக்கும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதே இந்த கட்டுரைகளின் நோக்கம்.அதற்காகத்தான் முற்றிலும் தமிழிலேயே எழுதாமல் ஆங்காங்கே ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தி உள்ளேன். தாய் மொழியில் புரிந்துகொண்டு பின் ஆங்கிலத்தில் படிப்பது எளிதாக இருக்கும்.  )

1.கலால் வரி ( EXCISE DUTY ) என்பது என்ன?

2.கலால் வரிவசூல்  செய்யும் அதிகாரம் எந்த அரசுக்கு உள்ளது?

3.கலால் வரி வசூலிக்கும் அதிகாரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினா ல் வழங்கப்பட்டுள்ளதா?

4.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7 இல் கூறப்பட்டுள்ள பட்டியல்கள் என்ன?

5.கலால் வரிக்கான தனிப்பட்ட சட்டம் எதுவும் இயற்றப்பட்டுள்ளதா?
The Central Excise Act 1944  என்ற சட்டம் இதற்காக இயற்றப்பட்டு அவ்வப்போது திருத்தப்பட்டு வருகிறது.இது தவிர கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள், அறிவிக்கைகள் போன்றவையும் பின்பற்றப் படுகின்றன.
The Central Excise Tariff Act 1985
The Central Excise Rules 2002
The CENVAT Credit Rules 2004
The Central Excise Valuation (Determination of Price of Excisable Goods) Rules 200
The Central Excise( Determination of Retail Sale Price of Excisable Goods) Rules 2008
The Central Excise (Appeals) Rules 2001
The Central Excise (Removal of Goods at Concessional Rate of Duty for Mnufacture of Excisable Goods) Rules 2001
6.விரித்து எழுதுக .
CENVAT - CENTRAL VALUE ADDED TAX
BED - BASIC EXCISE DUTY
SED - SPECIAL EXCISE DUTY
EC-EDUCATIONAL CESS
SHEC- SECONDARY AND HIGHER EDUCATION CESS
EASIEST
TRACES
SEZ-SPECIAL ECONOMIC ZONE
EOU-EXPORT ORIENTED UNIT
HSN-HARMONISED SYSTEM OF NOMENCLATURE 












சேவை வரி (Service Tax) 

சேவை வரி என்றால் என்ன? 
பொருளாதார செயல்பாடுகளில் உற்பத்தி மற்றும் சேவை (Production and Service)  இரண்டுதான் அடிப்படையானவை.உற்பத்தியின் மீது வரிவிதிப்பு என்பது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.உற்பத்திப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிக்கு கலால் வரி (Excise Duty) என்று பெயர்.சேவைகளின் மீது விதிக்கப்படும் வரிக்கு சேவை வரி (Service Tax) என்று பெயர் .
சேவை என்றால் என்ன?

எவற்றை சேவை என்று சொல்லமுடியாது? 

இந்தியாவில் சேவை வரி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
நிதி சட்டம் 1994 இன் படி சேவை வரி வசூலிக்கப்படுகிறது. நிதி சட்டம் 1994 , ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைத் தவிர இந்தியாவின் இதர பகுதிகள் அனைத்துக்கும் பொருந்தும்.
வரி விதிக்கத்தக்க அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி விதிக்கப்படுகிறது.நிதி சட்டம் 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவு 66B (சார்ஜிங் செக்சன்) , 01-07-12 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த பிரிவின்படி ,சேவை வரி எல்லைக்குள்வழங்கப்பட்ட அல்லது வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட எதிர்மறைப் பட்டியலில் (நெகடிவ் லிஸ்ட்) உள்ளவை தவிர மீதி அனைத்து சேவைகளுக்கும் 12 விழுக்காடு வீதம் சேவைவரி வசூலிக்கப்படும்.
புதிய சேவை வரி விதிமுறைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள விரும்புவோர்
எதிர்மறைப் பட்டியல்(நெகடிவ் லிஸ்ட்) அறிவிக்கப்பட்ட சேவைகள்விலக்கு பெற்ற சேவைகள் மற்றும் சேவை வழங்கபப்படும் இடம் பற்றிய விதிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.

கலால் வரிக்கு Central Excise Act -உம் சுங்க வரிக்கு Indian Customs Act உம் இருப்பது போல சேவை வரிக்கென பிரத்யேக சட்டம் எதுவும் இருக்கிறதா?

சேவை வழங்குபவர்கள் சட்டப்படி பதிவு (Registration ) செய்துகொள்ள வேண்டுமா?


எல்லோருமே பதிவு செய்துகொள்ள வேண்டுமா? இதில் விதிவிலக்குகள் ஏதேனும் உண்டா?

மற்றொருவரின் வர்த்தகப் பெயரைப் பயன்படுத்தி ((Brand Name ) நான் சேவை வழங்கினால் நானும் பதிவு செய்ய வேண்டுமா?

பிறருடைய வர்த்தகப் பெயரைப் (Brand Name)  பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் ஒருவர் கண்டிப்பாகப் பதிவு  செய்துகொள்ளவேண்டும்.அவருடைய விற்றுமுதல் (Turnover) எவ்வளவாக இருந்தாலும் (சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு குறைவாக இருந்தாலும்) அவர் நிச்சயம் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

  ஒரு நபர் எத்தனை சேவைகளை வழங்கினாலும் ஒரே பதிவு போதுமா?

பதிவு செய்துகொள்பவருக்கு பதிவு எண் எதுவும் வழங்கப் படுகிறதா?
யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?


எந்த எந்த சேவைகளுக்கு வரி கட்ட வேண்டும்?
இது மிகவும் முக்கியமான கேள்வி.சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது மூன்று சேவைகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டது.இதன் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தற்போது Negative List அறிமுகம் ஆகிவிட்டது.அதாவது பதினேழு சேவைகளுக்கு மட்டும் வரி கட்டவேண்டியதில்லை.

Negative List ஐ பட்டியல் இடமுடியுமா? - Section 66D
எதிர்மறைப் பட்டியல்:

(A) அரசாங்கம் மற்றும் லோக்கல் அதாரிட்டி ஆகியவை வழங்கும் (கீழ் காண்பவைதவிர ) சேவைகள்

(B)இந்திய ரிசர்வ் வங்கியின் சேவைகள்
 (c)இந்தியாவில் உள்ள வெளினாட்டு அலுவலகங்கள் (Foreign Diplomatic Mission) வழங்கும் சேவைகள்
 (D)விவசாயம் தொடர்பான சேவைகள்
 (E) பொருள்களின் வர்த்தகம் (வாங்கி விற்றல்)

  (F) பொருட்களை தயாரித்தல் அல்லது உற்பத்தி செய்தல்
 (G) விளம்பரம் செய்வதற்காக இடம் அல்லது நேரத்தை ஒதுக்குதல்((வானொலி அல்லது தொலைக்காட்சியில் ஒலி /ஒளி பரப்பு செய்யப்படும் விளம்பரங்கள் தவிர)
 (H)  சாலை அல்லது பாலத்தில் பயணிப்பதற்காக சுங்கக் கட்டணம் வசூலித்தல்
(I) போட்டிப்பந்தயங்கள், சூதாட்டம் மற்றும் லாட்டரி
 (J)  பொழுதுபோக்கு மற்றும் களியாட்ட நிகழ்வுகளுக்கு அனுமதித்தல்
(K) மின்சார வினியோகம் மற்றும் பகிர்மானம்
 (L) கல்வி சேவைகள்
(M)மக்க்ள் குடியிருப்பதற்காக குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு விடுதல்
 (N) பண வைப்புகள் , கடன்கள் அல்லது முன்பணம் வழங்குதல் ( வட்டி அல்லது தள்ளுபடி பெறும் நோக்கத்துடன்) வங்கிகள் தங்களுக்குள்ளகவோ அல்லது அந்நிய செலவாணி டீலர்கள் தங்களுக்குள்ளாகவோ அல்லது வங்கிகளும் டீலர்களும் தங்களுக்குள்ளாகவோ அந்நிய செலாவணியை வாங்குதலும் விற்றலும்

(O)பிரயாணிகளை அவர்களுடைய உடைமைகளுடனோ அல்லது இல்லாமல் தனியாகவோ அழை த்து செல்லுதல் (கீழ் காண்பவை தவிர )
 (P) பொருட்களை சுமந்து செல்லுதல்(கீழ் காண்பவை தவிர )
 (Q)இறுதிசடங்கு , இடுகாட் டு சேவைகள்



அறிவிக்கபப்ட்ட சேவைகள் (Declared Services ) என்றால் என்ன?

அறிவிக்கபப்ட்ட சேவைகள்:
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவு 66ஏ இன் படி குறிப்பிட்ட  ஒன்பது செயல்முறைகள் அல்லது பரிமாற்றங்கள் சேவைகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன :
1.அசையாச் சொத்துகளை வாடகைக்கு விடுதல்
2.வளாகம் கட்டுதல்
3. 3.அறிவுசார் சொத்துரிமைகளை தற்காலிகமாக மாற்றுதல் அல்லது பயன்படுத்தவோ அல்லது அனுபவிக்கவோ அனுமதித்தல்
4.தகவல் தொழில் நுட்ப மென்பொருள்களை ருவாக்குதல்வடிவமைத்தல் மேம்படுத்துதல்
5.ஏதாவது ஒரு


ஏதாவது சேவைகளுக்கு வரி விலக்கு  (Exemption) அளிக்கப்பட்டுள்ளதா?
 ஓ! தாராளமாக.!சில சேவைகளுக்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.என்றாலும் இவற்றுக்கு வரி இல்லை என்று பொருள் கொள்ளக் கூடாது.ஏன் எனில் இவை என்றைக்கு வேண்டுமானாலும் வரி வலைக்கு (TAXNET) உள்ளே கொண்டுவரப்படலாம்.
சேவைவரி எல்லை (Taxable Territory) என்பது என்ன?

Point of Taxation என்பதைப் பற்றிக் கூற முடியுமா?

 வரி விகிதத்தை நிர்ணயம் செய்வது, சேவையின் மதிப்பைக்  (Value of Service)  கணக்கிடுவது மற்றும்  Exchange Rate ஆகியவற்றை முடிவுசெய்வதில் " Relevant Date "என்பது என்ன? 


சேவை வரியை யார் கட்டவேண்டும்?


சேவை வரியை சேவையை வழங்குபவர்தான் (Service Provider) கட்ட வேண்டும் என்பது அறிமுக காலத்தில் கூறப்பட்டது.ஆனால் தற்போது உள்ள நடைமுறையின்படி சேவை வரியை சேவையை வழங்குபவர் அல்லது சேவையைப் பெறுபவர்(Service Recipient) அல்லது இருவரும் இணைந்தும்  கட்டலாம். இதற்கு "Reverse Charge Mechanism" என்று பெயர்.


சேவையின் மதிப்பை எவ்வாறு கண்டறிவது/கணக்கிடுவது? (Valuation of Service)