பன்னாட்டு வாணிகம்
(INTERNATIONAL BUSINESS IN TAMIL)
ஒரு
நாட்டின் எல்லைகளைத் தான்டி பொருட்களை வங்குவதும்
விற்பதும் சேவைகளைப் புரிவதும் பெறுவதும் பன்னாட்டு வாணிகம்
எனப்படுகிறது. எல்லைகளைத்தாண்டி வர்த்தகம் செய்வதற்கு, அதிக இலாபம் ஈட்டுதல், உற்பத்தியின்
அளவை அதிகரித்தல்,உள்நாட்டு சந்தையில் வர்த்தகம் குறைந்து போதல், உள் நாட்டில்
இல்லாத தொழில் நுட்பங்கள், திறமையான
மனிதவளம், மூலப்பொருட்கள் போன்ற பல
காரணங்கள் இருக்கலாம்
உலகமயமாதல்
(GLOBALISATION)
உலக
நாடுகள் பொருளாதார நோக்கில் ஒருங்கிணைவதும்(ECONOMIC INTEGRATION) பொருளாதார
ரீதியில் ஒன்றை ஒன்று அதிகம்
சார்ந்திருப்பதும்
(ECONOMIC INTERDEPENDENCE) உலகமயமாதல்
எனப்படுகிறது. மூலப்பொருட்கள் உலகின் எந்த மூலையில்
மலிவாகக் கிடைத்தாலும் அதைப்பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தையில்
விற்பதே உலகமயமாதல் ஆகும். இதனால் உலகம்
முழுவதும் ஒரே சந்தையாக மாறுகிறது.
இதன் காரணமாக நாடுகளுக்கு இடையில்
உள்ள பொருளாதாரத் தடைகள் தகர்க்கப்படுகின்றன. மூலதனம்,
மனிதவளம், தொழில்நுட்பம் , உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவை
நாடுகளுக்கு இடையில் சுலபமாகப் பயணிக்கின்றன.
பன்னாட்டு வணிகச் சூழல் (INTERNATIONAL BUSINESS ENVIRONMENT):
பல்வேறு
நாடுகளில் வர்த்தகம் புரியும் ஒரு பன்னாட்டு நிறுவனம்,
அந்த நாடுகளில் உள்ள வரிவிதிப்பு முறைகள்,
வர்த்தக சட்டங்கள், அரசியல் சூழ்நிலை மற்றும்
சமூக கலாச்சார சூழல்கள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.சொந்த
நாட்டில் இது போன்ற சூழல்கள்
மாறுபட்டவையாக இருக்கலாம்.
பொருளாதாரச்
சூழல் (ECONOMIC ENVIRONMENT):
அரசியல்
சூழல் (POLITICAL
ENVIRONMENT):
தொழில்
நுட்பச் சூழல் (TECHNOLOGICAL
ENVIRONMENT) :
சமூக-கலாச்சாரச் சூழல் (SOCIO-CULTURAL
ENVIRONMENT) :
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு : (MULTI NATIONAL ENTERPRISES AND FOREIGN DIRECT
INVESTMENT-FDI)
பன்னாட்டு
வாணிபத்தில் ஒருநாட்டின் பங்கின் அளவைப் பொருத்தே உலகப்பொருளாதாரத்தில் அந்நாட்டின் முக்கியத்துவம் அறியப்படுகிறது. இவற்றுள் அமெரிக்காவின் பங்கு தொடர்ந்து குறைந்துகொன்டே வருகிறது.வளர்ந்துவரும் நாடுகள் ,குறிப்பாக எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு அதிகரித்துக்கொன்டே வருகிறது. சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தைவான் போன்ற நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் , அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட(GNP) அதிகமாக இருக்கிறது. இந்த நாடுகள் தங்களின் உற்பத்தியில் பெரும்பகுதியை
ஏற்றுமதி செய்வதுடன் , ஏற்றுமதிக்கான உற்பத்திக்குத் தேவையான இறக்குமதிகளையே அனுமதிக்கின்றன.
இந்தியாவின் தொழிற்
கொள்கை
(INDUSTRIAL POLICY OF INDIA)
தொழிற்கொள்கைப் பிரகடனம்
1948:((INDUSTRIAL POLICY RESOLUTION 1948)
தொழிற்கொள்கைப் பிரகடனம்
1956LINDUSTRIAL
POLICY RESOLUTION 1956)
புதிய தொழிற்கொள்கை 1991(NEW
ECONOMIC POLICY 1991)
வெளி நாட்டு வர்த்தகக்
கொள்கை:
(FOREIGN TRADE POLICY)
சிறப்புப் பொருளாதார
மண்டலங்கள்
(SPECIAL ECONOMIC ZONES-SPZ)
ஏற்றுமதி இறக்குமதி
வங்கி
(EXIM BANK OF INDIA)
ஏற்றுமதி மேலாண்மை
LEXPORT
MANAGEMENT)
இறக்குமதி-ஏற்றுமதியாளர்
எண்
(IMPORTER –EXPORTER CODE NUMBER-IEC)
ஏற்றுமதிக்குத் தேவையான
ஆவணங்கள்:
தடையற்ற வர்த்தகம் (FREE TRADE)
வேறு
எந்த நாட்டுடன் ஒப்பிட்டாலும், எல்லாத்துறைகளிலும் குறைந்த திறன் படைத்த
ஒரு நாடு , தடையற்ற
வர்த்தகத்தின் மூலம் நன்மை அடையக்கூடும்
உலகத்திலேய
மிகக்குறைந்த செலவில் பொருட்களை உற்பத்தி
செய்யும் உள்நாட்டு நிறுவனம், தடையற்ற வர்த்தகத்தால் (Free Trade) ஏற்படும் போட்டியின்
காரணமாக தோல்வி அடையக்கூடும்
வர்த்தகப்
பாதுகாப்பு (Protectionism)
என்பது ஒரு நாட்டுக்கு நன்மை
பயப்பதாக இருக்கலாம். இருந்தாலும் தடையற்ற வர்த்தகமே இந்நாளில்
ஊக்குவிக்கப்படுகிறது.
தடையற்ற
வர்த்தகத்தின் காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார
திறன் (Aggregate Economic
Efficiency) உயர்கிறது.ஒரு நாட்டின் உற்பத்தித்
திறனும்(Production
Efficiency) நுகர்வுத் திறனும் (Consumption Efficiency) அதிகரிக்கின்றன.
உற்பத்திதிறன்
அதிகரிக்கிறது என்றால் அதே அளவு
மூலப்பொருட்களைக் கொண்டு அதிகமாக உற்பத்தி செய்வது.
நுகர்வுத் திறன் அதிகரிப்பது என்றால்
சிறந்த பொருட்களை தேர்ந்தெடுத்து நுகர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
No comments:
Post a Comment