சேவை வரி (Service Tax)
சேவை வரி என்றால் என்ன?
பொருளாதார செயல்பாடுகளில் உற்பத்தி மற்றும் சேவை (Production and Service) இரண்டுதான் அடிப்படையானவை.உற்பத்தியின் மீது வரிவிதிப்பு என்பது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.உற்பத்திப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிக்கு கலால் வரி (
Excise Duty) என்று பெயர்.சேவைகளின் மீது விதிக்கப்படும் வரிக்கு சேவை வரி
(Service Tax) என்று பெயர் .
சேவை என்றால் என்ன?
எவற்றை சேவை என்று சொல்லமுடியாது?
இந்தியாவில் சேவை வரி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
நிதி சட்டம் 1994 இன் படி சேவை வரி வசூலிக்கப்படுகிறது. நிதி சட்டம் 1994 , ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைத் தவிர இந்தியாவின் இதர பகுதிகள் அனைத்துக்கும் பொருந்தும்.
வரி விதிக்கத்தக்க அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி விதிக்கப்படுகிறது.நிதி சட்டம் 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவு 66B (சார்ஜிங் செக்சன்) , 01-07-12 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த பிரிவின்படி ,சேவை வரி எல்லைக்குள், வழங்கப்பட்ட அல்லது வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட , எதிர்மறைப் பட்டியலில் (நெகடிவ் லிஸ்ட்) உள்ளவை தவிர மீதி அனைத்து சேவைகளுக்கும் 12 விழுக்காடு வீதம் சேவைவரி வசூலிக்கப்படும்.
புதிய சேவை வரி விதிமுறைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள விரும்புவோர்
, எதிர்மறைப் பட்டியல்(நெகடிவ் லிஸ்ட்) , அறிவிக்கப்பட்ட சேவைகள், விலக்கு பெற்ற சேவைகள் மற்றும் சேவை வழங்கபப்படும் இடம் பற்றிய விதிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
கலால் வரிக்கு Central Excise Act -உம் சுங்க வரிக்கு Indian Customs Act உம் இருப்பது போல சேவை வரிக்கென பிரத்யேக சட்டம் எதுவும் இருக்கிறதா?
சேவை வழங்குபவர்கள் சட்டப்படி பதிவு (Registration ) செய்துகொள்ள வேண்டுமா?
எல்லோருமே பதிவு செய்துகொள்ள வேண்டுமா? இதில் விதிவிலக்குகள் ஏதேனும் உண்டா?
மற்றொருவரின் வர்த்தகப் பெயரைப் பயன்படுத்தி ((Brand Name ) நான் சேவை வழங்கினால் நானும் பதிவு செய்ய வேண்டுமா?
பிறருடைய வர்த்தகப் பெயரைப் (Brand Name) பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் ஒருவர் கண்டிப்பாகப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.அவருடைய விற்றுமுதல் (Turnover) எவ்வளவாக இருந்தாலும் (சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு குறைவாக இருந்தாலும்) அவர் நிச்சயம் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
ஒரு நபர் எத்தனை சேவைகளை வழங்கினாலும் ஒரே பதிவு போதுமா?
பதிவு செய்துகொள்பவருக்கு பதிவு எண் எதுவும் வழங்கப் படுகிறதா?
யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?
எந்த எந்த சேவைகளுக்கு வரி கட்ட வேண்டும்?
இது மிகவும் முக்கியமான கேள்வி.சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது மூன்று சேவைகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டது.இதன் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தற்போது Negative List அறிமுகம் ஆகிவிட்டது.அதாவது பதினேழு சேவைகளுக்கு மட்டும் வரி கட்டவேண்டியதில்லை.
Negative List ஐ பட்டியல் இடமுடியுமா? - Section 66D
எதிர்மறைப் பட்டியல்:
(A) அரசாங்கம் மற்றும் லோக்கல் அதாரிட்டி ஆகியவை வழங்கும் (கீழ் காண்பவைதவிர ) சேவைகள்
(B)இந்திய ரிசர்வ் வங்கியின் சேவைகள்
(c)இந்தியாவில் உள்ள வெளினாட்டு அலுவலகங்கள் (Foreign Diplomatic Mission) வழங்கும் சேவைகள்
(D)விவசாயம் தொடர்பான சேவைகள்
(E) பொருள்களின் வர்த்தகம் (வாங்கி விற்றல்)
(F) பொருட்களை தயாரித்தல் அல்லது உற்பத்தி செய்தல்
(G) விளம்பரம் செய்வதற்காக இடம் அல்லது நேரத்தை ஒதுக்குதல்((வானொலி அல்லது தொலைக்காட்சியில் ஒலி /ஒளி பரப்பு செய்யப்படும் விளம்பரங்கள் தவிர)
(H) சாலை அல்லது பாலத்தில் பயணிப்பதற்காக சுங்கக் கட்டணம் வசூலித்தல்
(I) போட்டிப்பந்தயங்கள், சூதாட்டம் மற்றும் லாட்டரி
(J) பொழுதுபோக்கு மற்றும் களியாட்ட நிகழ்வுகளுக்கு அனுமதித்தல்
(K) மின்சார வினியோகம் மற்றும் பகிர்மானம்
(L) கல்வி சேவைகள்
(M)மக்க்ள் குடியிருப்பதற்காக குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு விடுதல்
(N) பண வைப்புகள் , கடன்கள் அல்லது முன்பணம் வழங்குதல் ( வட்டி அல்லது தள்ளுபடி பெறும் நோக்கத்துடன்) வங்கிகள் தங்களுக்குள்ளகவோ அல்லது அந்நிய செலவாணி டீலர்கள் தங்களுக்குள்ளாகவோ அல்லது வங்கிகளும் டீலர்களும் தங்களுக்குள்ளாகவோ அந்நிய செலாவணியை வாங்குதலும் விற்றலும்
(O)பிரயாணிகளை அவர்களுடைய உடைமைகளுடனோ அல்லது இல்லாமல் தனியாகவோ அழை த்து செல்லுதல் (கீழ் காண்பவை தவிர )
(P) பொருட்களை சுமந்து செல்லுதல்(கீழ் காண்பவை தவிர )
(Q)இறுதிசடங்கு , இடுகாட் டு சேவைகள்
அறிவிக்கபப்ட்ட சேவைகள் (Declared Services ) என்றால் என்ன?
அறிவிக்கபப்ட்ட சேவைகள்:
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவு 66ஏ இன் படி குறிப்பிட்ட ஒன்பது செயல்முறைகள் அல்லது பரிமாற்றங்கள் சேவைகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன :
1.அசையாச் சொத்துகளை வாடகைக்கு விடுதல்
2.வளாகம் கட்டுதல்
3. 3.அறிவுசார் சொத்துரிமைகளை தற்காலிகமாக மாற்றுதல் அல்லது பயன்படுத்தவோ அல்லது அனுபவிக்கவோ அனுமதித்தல்
4.தகவல் தொழில் நுட்ப மென்பொருள்களை உருவாக்குதல், வடிவமைத்தல் , மேம்படுத்துதல்
5.ஏதாவது ஒரு
ஏதாவது சேவைகளுக்கு வரி விலக்கு (Exemption) அளிக்கப்பட்டுள்ளதா?
ஓ! தாராளமாக.!சில சேவைகளுக்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.என்றாலும் இவற்றுக்கு வரி இல்லை என்று பொருள் கொள்ளக் கூடாது.ஏன் எனில் இவை என்றைக்கு வேண்டுமானாலும் வரி வலைக்கு (TAXNET) உள்ளே கொண்டுவரப்படலாம்.
சேவைவரி எல்லை (Taxable Territory) என்பது என்ன?
Point of Taxation என்பதைப் பற்றிக் கூற முடியுமா?
வரி விகிதத்தை நிர்ணயம் செய்வது, சேவையின் மதிப்பைக் (Value of Service) கணக்கிடுவது மற்றும் Exchange Rate ஆகியவற்றை முடிவுசெய்வதில் " Relevant Date "என்பது என்ன?
சேவை வரியை யார் கட்டவேண்டும்?
சேவை வரியை சேவையை வழங்குபவர்தான்
(Service Provider) கட்ட வேண்டும் என்பது அறிமுக காலத்தில் கூறப்பட்டது.ஆனால் தற்போது உள்ள நடைமுறையின்படி சேவை வரியை சேவையை வழங்குபவர் அல்லது சேவையைப் பெறுபவர்
(Service Recipient) அல்லது இருவரும் இணைந்தும் கட்டலாம். இதற்கு
"Reverse Charge Mechanism" என்று பெயர்.
சேவையின் மதிப்பை எவ்வாறு கண்டறிவது/கணக்கிடுவது? (Valuation of Service)