வேதத்தில் எல்லாம் இருக்கிறதா என்ன?
3500 அல்லது 4000 ஆண்டுகளுக்கு முன்பாக வேதங்களை யார்
தொகுத்திருந்தாலும் தங்களின் சந்ததியினருக்கு மிகவும் வசதியான ஒரு வடிவத்தில் அதை
செய்திருக்கிறார்கள். ரிக் யஜுர் சாம மற்றும் அதர்வ வேதங்களும் சம்ஹிதை, பிராம்மணா , ஆரண்யகா மற்றும் உபநிஷதங்கள் என்னும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன.
இது மிகவும் அறிவுபூர்வமான விஷயமாகும்.ஏன் எனில், இந்த
நான்கு விஷயங்களிலும் அடிப்படையான(பொதுவான) எந்த ஒரு விஷயமும் இல்லை (அப்படி
ஏதாவது இருந்திருந்தால், உபநிஷதங்களில் வெகுவாகப் பேசப்பட்டிருக்கும்
பல விஷயங்களில் அது வெளிப்பட்டிருக்கும்) ஆனால் இவற்றை தொகுத்தவர்கள், logic பற்றிக்கவலைப் படாமல்,
வரலாற்று அறிஞர்கள், புராண ஆய்வாளர்கள், சடங்குகளை நம்புபவர்கள், சட்ட நிபுணர்கள், மற்றும் தத்துவ அறிஞர்கள் ஆகியோரின் வேறுபட்ட நடைமுறைத் தேவைகளைப் பற்றி
அவர்கள் சிந்தித்தனர். எனவே இவர்களின் தேவைகளைப் பற்றிப் பேசும் பகுதிகளை
முறைப்படுத்தி அமைத்ததன் மூலம் அனைவரின் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்டன.
மற்றவர்களின் பகுதிகளுடன் மோதாமல், ஒவ்வொருவரும் தம்முடைய
தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இது வசதியாக இருக்கிறது .இவ்வாறாக வேதங்கள் அனைவருக்கும்
தேவையான அனைத்தையும் தருவதாய் விளங்குகின்றன. - யாரோ
No comments:
Post a Comment