Monday, June 16, 2014

இந்திய நிறுமங்கள் சட்டம் (INDIAN COMPANIES ACT 2013)

இந்திய நிறுமங்கள் சட்டம் (INDIAN COMPANIES ACT 2013) 

இந்திய நிறுமங்கள் சட்டம் 1956 (Indian Companies Act 1956) முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Indian Companies Act 2013 என்றழைக்கப்படும் இதில் பல புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.பழைய சட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய சட்டத்தின் சிறப்பம்சங்கள் :

29 அத்தியாயங்கள் (CHAPTERS)

470 பிரிவுகள் (SECTIONS) 



* ஒரு நபர் நிறுமம் என்ற புதிய நிறுமவகை  {One Person Company (OPC) }இந்த சட்டத்தின் மூலம் அறிமுகமாகிறது.இது ஒரு தனியார் நிறுமம் ஆகும்.இதில் ஒரே ஒரு உறுப்பினர் / ஒரே ஒரு இயக்குனர் மட்டுமே இருப்பார்.வருடாந்திர உறுப்பினர்கள் கூட்டத்தை (AGM) கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. தற்போது இயங்கிவரும் - ரூபாய் 50 லட்சம் மூலதனமும் ரூபாய் 2 கோடி விற்றுமுதலும் கொண்ட தனியார் நிறுமங்களும் ஒரு நபர் நிறுமம் ஆக மாறிக்கொள்ளலாம்.

*பெண் இயக்குனர் Woman Director

*இயக்குனர்களுக்கு கடன் வழங்குதல்( Loans to Directors)

*இயக்குனர்கள் தகுதி இழத்தல்

*உள்ளுறை இயக்குனர் (Resident Director)

*கணக்கு ஆண்டு (Accounting Year)

*நிதி ஆண்டு( Financial Year)

*தணிக்கையாளர்களை நியமனம் செய்தல் (Appointment of Statutory Auditors)



அத்தியாயம் - II

 பிரிவு 3 (Section 3)

ஒரு நிறுமத்தை உருவாக்குதலும் அது தொடர்பான இதர விஷயங்களும்

3.(1) சட்டபூர்வமான ஒரு நோக்கத்திற்காக
(a) பொது நிறுமமாக இருந்தால் , ஏழு பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இணைந்தும் : அல்லது
(b) தனியார் நிறுமமாக இருக்குமெனில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இணைந்தும்; அல்லது
(c) ஒரு நபர் நிறுமமாக - அதாவது தனியார் நிறுமமாக இருக்குமெனில் ஒரு நபர் மட்டுமோ
ஒரு நிறுமத்தை உருவாக்கலாம். இவர்களின் பெயர் அல்லது ஒரு நபரின் பெயர் Memorandum ல் இருக்க வேண்டும்.
நிறுமத்தைப் பதிவு செய்வதில் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களும் பின்பற்றப்பட வேண்டும்.


No comments:

Post a Comment