Monday, July 23, 2012

கந்தர் அநு பூதி

கி.வா .ஜ அவர்களின் கந்தர் அநு பூதி  விளக்கம் படித்தேன் .நெஞ்சக் கனகல் பற்றிய விளக்கம் மிகவும் அருமை.மனிதன் தன காலில் ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு கடலில் விழுந்து தவிக்கிறான் .அவன் காலில் கட்டிக் கொண்டு தவிக்கிறானே அந்தக் கல்தான் உருக வேண்டியது .கல் உருகினால் அவன் மேலே வர முடியும்.எதையாவது பிடித்துக் கொண்டு கரையேற முடியும்.பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமெனில் ஏதாயினும் ஒரு துரும்பையாவது "பற்ற " வேண்டும் .இந்தப் பற்றை அறுப்பதற்கு அவனைப் பற்ற வேண்டும்.

உடலில் இருந்து உயிர் பிரிகையில் அதனுடன் மனமும் செல்கிறது.மனத்தை கழற்றி விடும் ஆத்மா இறைவனை சேர்கிறது .(பிரம்ம சூத்திரமும் இதையேதான் சொல்கிறது).மனத்துடன் பிரியாது இருக்கும் ஆத்மா இன்னொரு உடலில் புகுந்து பிறவி எடுக்கிறது.

படங்கள் :ஆலங்குடி குரு ஸ்தலம் 



No comments:

Post a Comment